வியாழன், 9 பிப்ரவரி, 2012

3 இடியட்ஸ் படம் பார்த்தப்போ...


                                         3 இடியட்ஸ் படம் பார்த்த போதே சக்தி வேல் ஞாபகமும் தொடர்ந்து செல்வனின் ஞாபகமும் வந்தது.
                                         காவேரி பாலத்தில் இலக்கியம் பேசியபடி நடந்த அந்த டிசம்பர் மாத இரவுகள் இன்றும் நினைதால் இனிக்காவிட்டாலும் ஒரு வார்த்தையில் வடிக்க இயலாத பரவசத்தை அது என்றைக்கும் தரும்.
சக்திக்கு தமிழ் வார மாத இதழ்கள் அதிகம் படிப்பான். விகடன் மஞ்சரி போன்ற புத்தகங்களின் பிரதான வாஸகன்!.அந்த நாளில் அவர்களின் செமி அக்ரஹாரத்துக்குள் குமுதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.(அதிகமாய் பெண்கள் படம் அட்டை படமாய் இருந்ததால் இருந்திருக்கலாம்).சீரியஸ் ரீடர் என்றால் அது அவன் தான்.அட்டை டூ அட்டை படிப்பான்.படைப்பாளிகளை சற்று அதிகமாகவே புகழ்வான்.சக்தி அம்மாவும் கதைகளை படிப்பார்கள்.நாங்கள் பார்க்கும் சமயங்களில் எல்லாம் சக்தி அப்பா ஹிந்து பேப்பருடன் தான் இருப்பார்.
                               ஜெயகாந்தனை ரசிப்பவன் என்பதால் எனக்கு சக்தி மீது ஒரு பிரியம் இருந்தது.செல்வன் ஆங்கில இலக்கிய மாணவன்.அவனுக்கு அந்த நாட்களில் தமிழ் இலக்கியம் பற்றீ ஒரு மயிரும் தெரியாது.அவ்ன் ஆங்கில இலக்கிய பட்ட மேற்படிப்பு சேர்ந்ததே ஒரு விபத்து.அண்ணன் புடுங்கல் காரணமாய் அவன் பல விருப்பம் இல்லா வேலைகளை செய்ய வேண்டி இருந்தது.அதில் இந்த எம்.ஏ ஆங்கில இலக்கியமும் ஒன்று.
செல்வனை முதன் முதலில் நான் பார்த்தது கைலியை மடித்து கட்டிக் கொண்டு ஒரு கையில் மாட்டு முக்கானாங்கயிறும் மறு கையில் கன்னுக்குட்டி கட்டிய கயிறுடன் மாட்டாஸ்பத்திரிக்கு போய் கொண்டி இருக்கும் தருணத்தில் தான்.
                                அடுத்த எங்களது சந்திப்பின் போது செல்வன் மாட்டுக்கு புல் கட்டு வாங்க சைக்கிளில் போய் கொண்டிருந்தான்.
                             பின்னாட்களில் அவன் தான் என்னை T.S.Eliot ன் four Qutrant. Murder in the cathetral ,Walt Witman, Keats என என்னைஆங்கில இலக்கிய உலகத்துக்கு கூட்டி சென்றவன்.மாட்டுக்கு புல் கட்டு வாங்க சைக்கிளில் போய் கொண்டிருந்த சமயத்தில் தான் தத்தம் ,தயாத்துவம், தம்மியதா, பற்றி ,American Dreams, Existentialism. பற்றிசொன்னான்.அவனுக்கு ஆசானாய் இருந்தவர் Prof.தாராநாத்,கிரிஷ் கர்னாட் நடித்த "சமஸ்காரா"  படத்துக்கு இசை அமைத்தவர்.கன்னட திரைஉலகுக்கு தங்கத் தாமரை விருது வாங்கித்தந்த இந்த படத்தின் கதை யூ.ஆர்.அனந்த முர்த்தி,இயக்கம் பட்டாபி ராமரெட்டி.
                      செல்வ னை சாதாரணமாய் யாராலும் புரிந்து கொள்ள முடியாது.மிகவும் ஆழமானவன்.மூர்க்கமாய் அன்பு செலுத்துபவன்.அறியாமல் பிறரை காயபடுத்தியது அறியவரும் போது, உள்ளுக்குள் அழுவதுடன் நீண்ட நாள் சோகத்தில் ஆழ்ந்து விடுபது அவன் இயல்பு.தவறை உணர்ந்தேன் தண்டி என்பது போல் தலை தாழ்த்தி நிற்ப்பான்.அன்புக்கு அடிமையாகியவன்.
பால்யத்தில் தந்தையாரை இழந்திருந்த அவனிடம் சக்தி, துண்டிக்க இயலா தாயன்பு கொண்டிருந்தான்.பிரதியாக சக்தியிடம் செல்வன் பூண்டிருந்தது மிகவும் ஆக்ரோஷமான காதல் அல்லது வெறி.
செல்வன் பின்னாட்களில் தான் தமிழ் சிறுகதைகளையும் பிற இலக்கிய படைப்புகளையும் படிக்க ஆரம்பித்தான்.இதற்கு சக்தியும் ஒரு மறை காரணம்.
                           மூவரும் இரவு நேரங்களில் காவிரி பாலத்தில் நடந்தபடி இலக்கியம் பேசிக் கொண்டு ,அல்லது பேசியபடி நடந்து கொண்டு நாட்களை கடத்தினோம்.
                                                               
                                அந்த நாட்களில் எங்களின் ஆதர்ச படைப்பாளி ஜெய காந்தன் தான்.அவர் எழுத்துக்கள் மீது அப்படி ஒரு ஈர்ப்பு.அவரின் ரிஷி மூலம்,சிலர் உள்ளே இருக்கிறார்கள்,சிலர் வெளியே இருக்கிறார்கள்பாரிஸுக்கு போ,அக்னி பிரவேசம், பற்றி அதிகமாய் விவாதித்து இருப்போம்.சிறுகதை தொகுப்புகளில் அவர் எழுதும் முன்னுரையை பல முறை படித்து மகிழ்வது எங்களது வழக்கம்.  சிங்கம் போல் அவர் ஒரு பீடத்தில் இருந்து கர்ஜிப்பது போல எங்களுக்கு தோன்றும்.அவரது காட்டாற்று வெள்ளமாய் பிரவாகிக்கும் அவரது நடை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.சவடால் அடி அடிக்கும் இலக்கிய மிராசுகளை,பிரம்மாக்களை நெற்றியில் புரளும் மயிற்றை புறங்கையினால் அசால்ட்டாய் தள்ளுவது போல் இருக்கும் அவரது முன்னுரைகள்.
                        ஒரு முறை திருச்சி ராக்ஸி தியேட்டரில் ஜெயகாந்தனின் உன்னை போல் ஒருவன் படம் ஒரு காட்சி திரையிடப்பட்டது.அப்போது நாங்கள் அரை டவுசர்கள் திருச்சி சினிஃபோரம் ஏற்பாடு செய்ததாய் ஞாபகம்.ஜெயகாந்தனின் நண்பர் குமரி டுட்டோரியல் முதல்வர் எம்.எஸ்.நாடாரும் உதவி செய்து இருந்தார்.பட இடைவேளையில் ஜெயகந்தன் பேசினார்.
" எனது இந்த படம்.நூறு நாள் ஓடாது: ஏன் நூறு காட்சிகள் கூட ஓடாது.ஒரே ஒரு காட்சிதான் ஓடும். நூறு நாட்கலூக்குப் பின் திரையிட பட்டாலும் அதே ஒரு காட்சி ஓடும். அதே நூறு வருடங்களுக்கு பின் திரையிட பட்டாலும் அதே ஒரு காட்சி ஓடும்.
ஆயிரம் வருடங்களுக்கு பின் திரையிட பட்டாலும் அதே ஒரு காட்சி ஓடும். என் படைப்பை பார்த்து ரசிக்க ஆள் இருக்கும்.ஆனால் நூறு நாட்கள் ஓடிய எந்த படமாலும் சரி அதை அடுத்த ஆண்டு திரையிட பட்டால் ஒரு காட்சி கூட ஓடாது."
படத்தை விட அவரின் பேச்சு அதிகமாய் அனைவரையும் கவர்ந்தது.
                                           பின் நாட்களில் சக்திக்கு PWD-ல்.Temp கிளார்க் வேலை கிடைத்தது.சென்னைக்கு போன பின்னர் தான் அவனுக்கு தெரிந்தது,வேலை வள்ளவர் கோட்டம் கட்டிட நிர்மாண பணி என்பது.சிற்பி கணபதி ஸ்தபதியின் கை வ்ண்ணம். தினமும் இரவு நேரங்களில் அப்போது முதல்வராய் இருந்த கலைஞர் அவர்கள் நேரில் வந்து கட்டுமான பணியை மேற் பார்வை இடுவாராம்.வள்ளவர் கோட்ட திறப்பு விழாவின் போது அவர் பதவி யில் இல்லாத்தால் அழைக்கப்படவில்லை.
                                     அந்த திறப்பு விழாவிற்கு ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டிருந்தாராம்.சக்தி வேலைத்தான் அவருக்கு Protocol உதவியாளராய் ஏற்பாடு செய்து இருந்தார்களாம்.
சக்திக்கு வாழ்வில் மறக்க முடியா மிக முக்கிய தருணமாய் அவை இருந்ததாம்.
."வள்ளுவனின் இந்த நினைவாலயம் கட்ட முதல் செங்கல்லை எடுத்து வைத்த அந்த கொத்தனார் சித்தாளுக்கு நன்றி, கோட்டம் கட்ட காரணமாய் இருந்த கலை ஞருக்கு நன்றி" என்று விழாவில் சிங்கமாய் முழங்கினாராம் ஜெயகாந்தன்
மேடை யாருடயதாய் இருந்தாலும் ஜெயகாந்தன் துணிச்சலாய் தன் கருத்தை சொல்ல என்றும் தயங்கியது இல்லை..
விழாவிற்க்கு முன்பு, கோட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த சமயம், சக்தி வேல், " சார் இந்த ரிஷி மூலம் பற்றி," என்ற போது,"படைப்பாளிக்கும்  வாசகனுக்கும் படைப்பு என்ற பாலம் போதும்" என் சொல்லிவிட்டு அவர் அமைதியாகிவிட்டாராம்.
                சில நிமிடங்கள் சென்ற பின் மீண்டும் சக்தி, "சார் அந்த ராஜாராமன் " என்று ஆரம்பித்த போது,அவர்,"படைப்பாளிக்கும் வாசகனுக்கும் மத்தியில் ஒரு வெற்றிடம் வரும் சந்தர்பங்களில் எனது முன்னுரைகள் போதும் பேச " என் அவனை அதிகம் பேச விடாமல் தடுத்துவிட்டாராம்.
 மீண்டும் சக்தி, ந்ம்பிகையுடன்"  வேத வித்து பிறப்பால் சாத்தியமா? சன்யாசம் என்பது சாமான்யனை ரிஷியாக்கும் சடங்கா .." என்று ஆரம்பித்த உடன் , மிஸ்டர் சக்தி வேல்,நான் தனியனாய் இருக்கும் போது வாருங்கள் உங்களுக்கு அதிகம் தெரியுமா இல்லை எனக்கு அதிகம் தெரியுமா என்று பார்த்துக் கொள்ளலாம் I came here as a quest " என்றாராம்.
                          இந்த சம்பவத்தை தனக்கே உரிய அசட்டு புன் சிரிப்புடன், சக்தி எங்களுக்கு அடிக்கடி சொல்லி சொல்லி மகிழ்ந்துபோவான்.வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவிற்கு பின்னர் சக்தி சென்னையை விட்டு வந்துவிட்டான்.
சக்திக்கு சென்னையின் பர பரப்பு ,வேகம், ஜன நெரிசல் சாப்பாட்டு ருசி என்று எதுவும் பிடிக்காமல் ஊருடன் வந்துவிட்டான்.செல்வனும் அவனும் ஈருடல் ஒர் உயிராய் இருந்தவர்கள்.அவர்கள் மத்தியில் அடிக்கடி விவாதம் வந்து சண்டை மூண்டு கொண்டிருந்தது.செல்வன் எல்லாவற்றையும் மிகவும் சீரியஸாய் எடுத்துக் கொண்டு சக்தியுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டான்.சக்தி அவனுடன் சகஜமாய் பேச வந்தாலும் அதை செல்வன் மூர்க்கமாய் தவிர்த்து " என்னோடு பேசாதே. என் மு ஞ்சியில் முழிக்காதே போ.."என்று திட்டிவிடுவதை வழக்கமாய் கொண்டிருந்ததால் சக்தியும் அவனை தவிர்த்து வந்தான்.
                                                  ஒரு சமயம்,மிக பெரிய Organisation ஒன்று ஊர் வி.ஐ பிக்கள்,வர்த்தகபிரமுகர்கள்,மற்றும் பிரபலங்களை உறுப்பினர்களாய் கொண்ட அமைப்பு அது;அவர்களின் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஜெயகந்தனை அழைத்து இருந்தனர்.  அந்த அமைப்புக்கும் இலக்கியத்துக்கும் பல ஒளி ஆண்டுகள் தூரம்.
                             வரவேற்புரையில் ஒரு உள்ளூர் நாயனம் இவ்வாறு பேசியது:
"வயிற்றுக்கு சோறு இல்லாத போது ஜெய காந்தன் 'ஒரு பிடி சோறு ' மாதிரி நல்ல கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்.பின்னர் அலுப்பான கதைகளை எழுத ஆரம்பித்து விட்டார்.சமிபத்தில் வரும் அவர் கதைகளை படிக்க பிடிப்பதில்லை"
உடனே ஜெயகாந்தன் My foot என்றார்.தொடர்ந்து நாயனம் பேசிக் கொண்டி ருந்தது.மீண்டும் ஜெய காந்தன் தன் அருகே இருந்த மைக் கில் " MY FOOT" உரக்க என்றார்.இதற்கு ஆடியன்ஸ் பலமாய் கை தட்ட தொடங்கினர்.தொடர்ந்து எழுந்த பலமான கை தட்டல் ஒலியால் உள்ளூர் நாயனத்தால் பேச முடியவில்ல.இத்துடன் என் சிற்றுரையை முடிதுக் கொள்கிறேன் என்று உட்கார்ந்து விட்டார்
                                                  இதையும் சக்தி அடிக்கடி சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வான்.இதை எல்லாம் பகிர்ந்து கொள்ள செல்வம் இல்லை பாரு என்பான்.
                       எப்போதும் சிரித்தபடி இருப்பான் சக்தி.அவனை பற்றிய பேச்சை எடுத்தாலே செல்வனுக்கு கோபம் வரும்.வாயில் வந்தபடி திட்டுவான்.நிஜத்தில் செல்வனுக்கு சக்தி சென்னை வேலையை விட்டுவிட்டு வீட்டு சாப்பட்டின் ருசிக்காய் ஊர் வந்துவிட்டதில் தான் வருத்தம்.உள்ளூரில்  எதோ அடுத்த .வீதியில் வேலை காத்துக் கொண்டு அவனை அழைத்த மாதிரி இந்த பயல் வந்துவிட்டான் என கத்துவான். நிஜத்தில் சக்தி வேலைகுப் போய் சம்பாதிக்க வேண்டியதில்லை.உத்யோகம் புருஷ லட்சணம் என்கிறது,செல்வனின் ஆதங்கம்.
எதற்கு இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது என்றால்--
            சமிபமாய் ஊர் போயிருந்த போது செல்வன் மிகவும் வருத்தபட்டு சொன்னான்.சக்தி இறந்துவிட்டதாய்.
                                       மிக சாதரண டென்ஷன் தந்த  PB அதிகரிப்பில் சக்தி இறந்து விட்டதாய் சொன்னான்.அவன் வெளியூரில் இருந்தாதால் தகவல் தாமதமாய் கிடைத்ததாய் சொன்னான்.சிறிது மௌனத்துக்குப்பின் "சக்தி சொன்ன மாதிரியே மூ ஞ்சிலே முழிக்காமல் போயிட்டான்" என்று தனக்குள் மெல்ல சொல்லிக் கொண்டான்.
செல்வன் அழவில்லை;அழவும் மாட்டான். எனென்றால் அது அவன் இயற்கை சுபாவம்.
உள்ளுக்குள் அழும் அவனை புரிந்தவன் நான் ஒருவன் தான்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

கடைசி பக்கங்கள்-எழுத மறந்தவை

Editor page,yellow page மாதிரி இது MY-PAGE
நிறைய படைப் பாளிகள் பிரபல பத்திரிக்கைளில் தங்களின் அணுபவங்களை பகிந்து கொள்கிறார்கள்.தங்களின் விருப்பு வெருப்புக்கள் பழைய பால்ய நினைவுகள் என பல உப்பு சப்பில்லாத விஷயங்களை , சுய புராணங்க்களை, இவர்கள் தாங்கள் எதோ பெரிதாக சாதித்துவிட்ட மாதிரி தான் பெரிய பீடத்தில் இருந்து உலக ஷேமத்தை கருத்தில் கொண்டு மற்ற மானிட பதர்களுக்கு sermon சொல்லும் த்வனியில் எழுதுவதை பார்க்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.அசோக மித்திரன்,ஆதவன் போன்றவர்களின் படைப்புகள் முதன் முதலில் தனி புத்தக உருவில் வந்தது,அவர்கள் எழுத ஆரம்பித்து நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான்
ஒரு பக்கம் எழுதியதில் சுஜாதா தான் முன்னோடி என்று நான் நினைக்கிறேன் கணையாழியின் கடைசி பக்கமும் குமுதம் இதழில் வந்த ஒரு பக்கமும் சுவாரஸ்யமாயும் தரமாயும் இருந்தவை.இவைகள் charles Lambஅவர்கள் எழுதிய Essays of Elia (Alpha to the plough-என்ற புனை பெயர்) மாதிரியான உயர் தரத்துடன் இருந்தவை. அவருடைய எழுத்துக்கள் சில சமயம் T.S Eliot-ன் Functions of  Critisim -மை நினவு படுத்தும். லேனா தமிழ் வாணன் அவர்களின் ஒரு பக்கங்களில் தன்னம்பிகை தரும் விஷயங்கள் நிறைய  இருக்கும்
                             .தமிழில் தன்னம்பிகை கட்டுரைகள் முத்த முதலில் எழுதியவர் தமிழ் வாணன் அவர்களாய்த்தான் இருக்க வேண்டும். துணிவே துணை இவரது தாரக மந்திரம் கல்கண்டு வார இதழில் இவர் எழுதிய  மல சிக்கல் இருக்கலாம் ஆனால் மன சிக்கல் இருக்கக் கூடாது போன்றவை மறக்க முடியாதவை.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களின் தினம் ஒரு தகவல் சுவாரஸ்யம் உள்ள நல்ல விவரங்களை தரும்.மௌனி என்ற ஒரு கதையாசிரியர் இருந்தார் அவரை ஜெய காந்தன் தன்னை கவர்ந்த பெரிய எழுத்தாளர் என கொண்டாடியது எத்தனை பேருக்குத் தெரியும். 1990 களில் தான் அவரது முழ சிறுகதைகளும் பல அறிவு ஜீவிகளின் கடும் முயற்சிகளால் தான் வெளிவந்தது.
                                 திரி லோக சீதாராம் என்ற கவிஞரை நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஞான ரதம் ,காவேரி,கண்ணதாசன் ,சிகரம் ,போன்ற இலக்கிய இதழ்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவைகளில் எழுதிய பல படைபாளிகள் unsung hero க்கள்.       
ஆனால் இன்று தற் சமயம்-
               ஒரு கவிதை அல்லது கதை தொகுப்பு வெளிவந்ததும் அதை  தொடர்ந்து உடனே ஒரு பாராட்டு விழா ,முக்கால் பக்க விளம்பரம்; அப்புறம் சினிமாவில்சான்ஸ் தேடல்.கிட்டிவிட்டால், எல்லா  TV channel களிலும் பேட்டிதான்.அதுவும் திபாவளி பொங்கல் சமயம் எல்லா சானல் களிலும் திருவிழா தான் .இப்போது விநாயகர் சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்தி ,காந்தி ஜெயந்தி என் எல்லா தினமும் ஏதாவது ஒரு காரணத்துடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்.
இப்போது எல்லாம் நம்  கோவில்களில் கூட தை வெள்ளி,ஆடிவெள்ளி என்ற விசேஷ நாட்களை தவிர சங்கட சதுர்த்தி,பிரதோஷம்  என பக்தர்களை கவர புது புது தினங்களை அறிமுகம் செய்கிறார்கள். கொண்டாட்ட தினங்கள் பெருகுகின்றது.காரணம் மக்களின் முயற்சி இன்மைதான்.இந்த முயற்சி இன்மைதான் மக்களை பக்தர்கள் ஆக்குகிறது..நம்மை எதாவது ஒரு சக்தி zenith க்கு கொண்டு செல்லாதா என்ற ஆதங்கம் தான்மனிதர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
 .இதை உணர்ந்த நம்T V channel களும் எதாவது கொண்டாட்ட தினங்களை ஜனங்களுக்கு தந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களும் 24x7ஏதாவது தீனீ போட்டாக வேண்டிய நிர்பந்தம்.
 இதனால் தான் ஒரு பக்க அலுப்பு சுய புராணங்களும்,நித்திரை தரும் தொலை காட்சி நிகழ்ச்சிகளும் நம்மை தாக்கி கொண்டுள்ளன.  இதில் இருந்து தப்ப வழி இல்லை
.Because we are part of the society.
tail piece : --
காதலன்:- நான், உயர ... உயர...  உயர...  உயர ..போகிறேன்
                      நீ யும் வா....
                                                   
காதலி :-   நான், பயந்து ..பயந்து ..சாகிறேன்
                      பதிலை தா .... நல் பதிலை தா ....

  
valaicharam.com